கங்குவா படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த ராணா… ஓ இதுதான் காரணமா?

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (07:22 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் ஆக்‌ஷன் காட்சி ஒன்றை சமீபத்தில் படக்குழு படமாக்கி முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி இறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி வியாழக் கிழமை  ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்து வருகிறார். ஆனால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராணாவைதான் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். ஆனால் அவர் கேட்ட சம்பளம் அதிகமாக இருந்ததால் தயாரிப்பு நிறுவனம் அவருக்கு பதில் பாபி தியோலை நடிக்க வைக்கும் முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்