தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி தன் 69 வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி நடந்த விருந்து நிகழ்ச்சியில் இதில், சூர்யா, அமீர்கான், உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
இதில் கலந்துகொண்ட நடிகர் விஷ்ணு விஷால் அமீர்கான் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து அதில், “சூப்பர் ஸ்டார்கள் சூப்பர் ஸ்டார்களாக இருப்பதற்குக் காரணம் இருக்கிறது” எனக் கூறியிருந்தார்.