ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் சூர்யாவின் கங்குவா!

புதன், 15 நவம்பர் 2023 (14:11 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இப்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது ஆந்திராவின் ராஜமுந்திரி காடுகளில் ஆக்‌ஷன் காட்சி ஒன்றை சமீபத்தில் படக்குழு படமாக்கி முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த படம் வெளியாகும் போது ஐமேக்ஸ் வடிவத்திலும் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பொன்னியின் செல்வன் மற்றும் லியோ போன்ற திரைப்படங்கள் இந்த வடிவில் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்