மெகா பவர் ஸ்டாருடன் இணையும் பிரம்மாண்ட இயக்குனர்!

Webdunia
சனி, 13 பிப்ரவரி 2021 (10:04 IST)
ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க தெலுங்கு நடிகர் ராம் சரண் ஒப்பந்தமாகியுள்ளார். 

 
பிரம்மாண்ட படங்களுக்கு பெயர் போன ஷங்கரின் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் நாயகனாக மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 
 
இயக்குநர் ஷங்கர் - நடிகர் ராம் சரண் - தயாரிப்பாளர் தில் ராஜு இணைந்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கிறது. இது ராம் சரணின் 15வது திரைப்படமாகவும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 50-வது படமாகும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்