தமன்னாவுக்கு பரிசளித்த ரஜினிகாந்த்… ஜெயிலர் நினைவுகள் பகிர்வு!

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2023 (07:57 IST)
தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார். ஆனால் ஒரு கட்டத்தில் புது நாயகிகளின் வரவுக்கு பிறகு தமன்னாவின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

இப்போது இரண்டாவது இன்னிங்ஸில் அடுத்தடுத்து படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் இப்போது அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் முடிந்தது என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்தது.

இப்போது ஜெயிலர் படத்தில் ரஜினியோடு இணைந்து நடித்தது குறித்து பேசியுள்ள தமன்னா “ரஜினி சாரோடு நடிக்க வேண்டும் என்ற என் வாழ்நாள் கனவு பலித்தது. அந்த படத்தின் அத்தனை தருணங்களும் எனக்கு என்றென்றும் நினைவில் இருக்கும். ரஜினி சார் அவரது கையொப்பமிட்ட ஆன்மீகப் புத்தகம் ஒன்றை பரிசாக அளித்தார். அந்த பரிசு மிகவும் அர்த்தமுள்ளதாக அமைந்தது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்