சர்ச்சைகள்… நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் வசூலில் சாதனை படைத்த ‘எம்புரான்’!

vinoth

செவ்வாய், 1 ஏப்ரல் 2025 (09:29 IST)
மோகன்லால் நடித்த ‘எம்புரான்’ திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்த படத்தின் தொடக்கத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தின் சிலக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. சில இந்து அமைப்புகள் இதில் உள்ள சில காட்சிகள் குறித்து எதிர்ப்பு தெரிவிக்க, உடனடியாக படக்குழு 17 இடங்களில் காட்சிகளை வெட்டவும், வசனங்களை ம்யூட் செய்து படத்தை மறு தணிக்கை செய்துள்ளது.

மேலும் நடிகர் மோகன்லால் தான் ஒரு கலைஞன் என்றும் எந்த மதத்துக்கும் எதிரானவன் இல்லை என்றும் கூறி வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஏதேச்சதிகாரத்தோடு கருத்து சுதந்திரத்தை நசுக்குவதாகக் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இப்படி படத்தை சுற்றி பல சர்ச்சைகள் சென்று கொண்டிருந்தாலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. வெளியான  5 நாட்களுக்குள்ளாகவே இந்த படம் சுமார் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்