ரஜினி லோகேஷ் இணையும் படத்தின் போட்டோஷூட் ரகசியமாக நடந்ததா? தீயாய் பரவும் தகவல்!

Webdunia
திங்கள், 8 மே 2023 (08:36 IST)
விக்ரம் என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்துக்குப் பிறகு லோகேஷ், இப்போது விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீருக்கு சில நாட்களுக்கு முன்னர் பயணம் செய்தது. அங்கு மோசமான வானிலை நிலவினாலும் படக்குழு அங்கேயே தங்கி இப்போது ஷூட்டிங்கை நடத்தி முடித்தனர். இப்போது சென்னையில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.

இந்நிலையில் அடுத்து லோகேஷ், ரஜினி நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் இது ரஜினி நடிக்கும் கடைசி படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை தயாரிக்க மாஸ்டர் மற்றும் லியோ படங்களின் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்க அதிக வாய்ப்புள்ளதாக சொலல்ப்படுகிறது. மேலும் சன் பிக்சர்ஸ், தில் ராஜு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், ஹோம்பாலே பிலிம்ஸ் என பல மொழி தயாரிப்பாளர்களும் லோகேஷை நச்சரிக்கிறார்களாம். இதனால் லோகேஷின் சம்பளத்தை எக்கச்சக்கமாக ஏற்றிவிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்காக சமீபத்தில் ஒருநாள் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் போட்டோஷூட் செய்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்துக்காகதான் போட்டோஷூட் செய்தார் என்று மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்