நடிகராக முதல் படத்துக்கே கோடிகளில் சம்பளம் வாங்கும் லோகேஷ் கனகராஜ்!

வியாழன், 4 மே 2023 (07:41 IST)
தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி ஸ்டண்ட் இயக்குனர்களாக இருப்பவர்கள் இரட்டையர்கள் அன்பறிவ். அவர்கள் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த படத்தில் இருந்து அவர்கள் வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது அவர்கள் இயக்கும் புதிய படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அவர்கள் இருவரும்தான் அந்த படத்தின் கதாநாயகர்கள் என்று சொல்லப்படுகிறது.

மேலதிக தகவலாக இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும், படத்தின் பட்ஜெட் 50 கோடிக்கு மேல் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்தில் நடிப்பதால் அனிருத் புதிதாக படங்கள் எதுவும் ஒத்துக்கொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்கு லோகேஷுக்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக தர சன் பிக்சர்ஸ் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு நடிகராக தன்னுடைய முதல் படத்துக்கே மிகப்பெரிய சம்பளத்தை லோகேஷ் பெறுகிறார் என்பது கோலிவுட்டில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்