இந்நிலையில் கடந்த வாரம் சாய்ரா பானு திடீரென ஏ ஆர் ரஹ்மானைப் பிரிவதாக அறிவித்தார். அதற்கு அடுத்த நாள் ஏ ஆர் ரஹ்மானும் விவாகரத்தை உறுதி செய்தார். இந்நிலையில் ஏ ஆர் ரஹ்மானிடம் பேசிஸ்ட்டாக பணிபுரிந்த மோஹினி டே என்பவரும் தனது கணவரை பிரிவதாக அறிவித்ததால் அவரால்தான் ரஹ்மான் தம்பதியினருக்கு இடையில் பிரிவெழுந்துள்ளதாக சர்ச்சைகள் கிளம்பின.
இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு இப்போது பதிலளித்துள்ளார் மோஹினி டே. அதில் “ஏ ஆர் ரஹ்மான் எனக்குத் தந்தை போன்றவர். சமூக ஊடகங்களில் என்னைப் பற்றி சிலர் தவறாக குறிப்பிட்டிருப்பதை பற்றி அறிந்து மனம் நொந்து போயிருக்கிறேன். தந்தை ஸ்தானத்தில் இருக்கும் ஒருவரோடு இணைத்துப் பேசுபவர்களின் மனநிலை எப்படிப்பட்டது?” என ஆவேசமாகப் பதிலளித்துள்ளார்.