ஜெயிலர் 500 கோடி கலெக்‌ஷனை கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி! வைரல் போட்டோ!

Webdunia
சனி, 26 ஆகஸ்ட் 2023 (08:04 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்துள்ளது.

இந்த நிலையில் நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் இந்த படத்தின் இதுவரையிலான வசூல் குறித்த நிலவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  படம் வெளியாகி இதுவரை 525+ கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதன் மூலம் தமிழ் சினிமாவில் 2.0 மற்றும் பொன்னியின் செல்வன் 1 ஆகிய படங்களுக்குப் பிறகு 500 கோடி ரூபாய் வசூல் செய்த படமாக ஜெயிலர் இணைந்துள்ளது. இதையடுத்து இந்த வெற்றியை படக்குழுவினர் ரஜினிகாந்தோடு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்