ஜெயிலர் மற்றும் லால் சலாம் ஆகிய படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் லைகாவின் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக இன்னும் தொடங்கப்பட வில்லை எனத் தெரிகிறது. இப்போது செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆன ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. தொடர்ந்து தர்பார், அண்ணாத்த படங்களின் தோல்வியால் ஜெயிலர் திரைப்படத்துக்கு சம்பளத்தைக் குறைத்துக் கொண்டதாக சொல்லப்பட்டது.