ரஜினிகாந்த் - மகேஷ் பாபு சந்திப்பு நடைபெறுமா?

Webdunia
சனி, 9 ஜூன் 2018 (15:02 IST)
ரஜினிகாந்த் - மகேஷ் பாபு இருவரும் சந்தித்துக் கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
மகேஷ் பாபு நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பரத் அனே நேனு’. கொரட்டலா சிவா இயக்கிய இந்தப் படத்தில், கியாரா அத்வானி ஹீரோயினாக நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ், சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்தப் படம். தமிழில் கூட இந்தப் படம் டப் செய்யப்பட்டு ‘பரத் எனும் நான்’ என்ற பெயரில் ரிலீஸாக இருக்கிறது.
 
இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘தோழா’ படத்தை இயக்கிய வம்சி இயக்கத்தில் நடிக்கப் போகிறார் மகேஷ் பாபு. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் ஷூட்டிங், வருகிற 10ஆம் தேதி டேராடூனில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், ஒரு வாரம் தாமதமாக 17ஆம் தேதி தொடங்க இருக்கிறது.
 
டேராடூனில் தான் ரஜினிகாந்த் படப்பிடிப்பும் நடந்து கொண்டிருக்கிறது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர். ரஜினிக்கும் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்