'காலா'வுக்காக இறங்கி வேலை செய்த விஷால்

வெள்ளி, 8 ஜூன் 2018 (18:59 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் நேற்று வெளியாகி ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிய நிலையில் இரண்டாவது நாளான இன்று திரையரங்குக்களில் கூட்டம் குறைந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
'காலா' படத்தின் விமர்சனங்கள் பாசிட்டிவ்வாக வந்திருந்தும் இரண்டாவது நாளே வசூல் குறைந்ததற்கு பைரசியும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. வெளிநாட்டில் படம் பார்த்த ரசிகர்கள் பலர் 'காலா' படத்தை ஃபேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய, லட்சக்கணக்கானோர் படத்தை அதில் பார்த்துவிட்டனர். 
 
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷாலின் முயற்சியால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுபோன்று லைவ் ஸ்ட்ரீமிங் செய்த சுமார் 4000க்கும் மேற்பட்ட லிங்குகளை தயாரிப்பாளர் சங்கத்தின் டெக்னிக்கள் நபர்கள் நீக்கியுள்ளனர். இந்த நடவடிக்கை குறித்து தமிழ் திரைப்படம் தயாரிப்பாளர் சங்கத்தின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: நேற்று 07.06.2018 ஒரே நாளில்  காலா படம் 4000-கும் மேற்பட்ட நபர்களால் சமூக வலைத்தளங்களில் போடப்பட்டது. நமது சங்கம் மூலம் செயல்படும் ஆன்டி பைரசி டிபார்ட்மெண்ட் அதனை முற்றிலும் நீக்கிவிட்டார்கள்
 
ரஜினியின் 'காலா'வுக்காக இறங்கி வேலை செய்த விஷாலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்