ரஜினிகாந்த்-லதா 40வது திருமண நாள்: ரசிகர்கள் வாழ்த்து!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (08:39 IST)
ரஜினிகாந்த்-லதா 40வது திருமண நாள்: ரசிகர்கள் வாழ்த்து!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் தம்பதிகளின் 40வது திருமண நாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து அவருக்கு அவருடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் லதாவை கடந்த 1981-ம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். ரஜினி மனைவி லதா ‘ஆஷ்ரமம்’ என்ற பள்ளியை நடத்தி வருகிறார்.
 
இந்த நிலையில் இன்று ரஜினிகாந்தின் நாற்பதாவது திருமண நாளை அடுத்து அவரது ரசிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் லதா புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
மேலும் திரை உலக பிரபலங்கள் அரசியல் பிரபலங்களும் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்துக்கு திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்