சிம்பு மற்றும் நயன்தாரா கெமிஸ்ட்ரி பற்றி விக்னேஷ் சிவன் ட்வீட்… எப்போ தெரியுமா?

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (08:13 IST)
நடிகர்கள் சிம்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்த இது நம்ம ஆளு திரைப்படத்தைப் பற்றி விக்னேஷ் சிவன் பகிர்ந்த ட்வீட் இணையத்தில் இப்போது பரவி வருகிறது.

வல்லவன் படத்தில் நடித்த போது சிம்பு மற்றும் நயன்தாரா இடையே காதல் உருவானது. ஆனால் அந்த காதல் குறுகிய காலமே நீடித்தது. விரைவில் இருவரும் பிரிந்தனர். பின்னர் இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இது நம்ம ஆளு படத்தில் இணைந்து நடித்தனர்.

அப்போது அந்த படத்தின் போஸ்டரைப் பகிர்ந்த விக்னேஷ் சிவன் ‘நயன்தாராவுக்கும் சிம்புவுக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி 100 சதவிதம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதற்கடுத்த ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தில் நடித்த நயன்தாரா அவரின் காதலியாக மாறினார். இப்போது இருவரும் 5 ஆண்டுகளாகக் காதலித்து வருகின்றனர். இந்நிலையில் விக்னேஷ் சிவனின் அந்த டிவீட் இப்போது இணையத்தில் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்