முதல் நாள் வசூலில் ஜெயிலரை விட பின்தங்கிய வேட்டையன்…!

vinoth
வெள்ளி, 11 அக்டோபர் 2024 (10:03 IST)
ஜெயிலர் என்ற சூப்பர் ஹிட் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையிக், எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவில் வேட்டையன் படம் உருவாகியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வேட்டையன் திரைப்படம் ரிலீஸாகியுள்ள நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலையிலேயே சென்னையில் உள்ள தேவி திரையரங்கில் விஜய் வேட்டையன் படத்தைப் பார்த்துள்ளார். படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களைக் கூறினர். ஒரு தரப்பினர் ரஜினி படம் போலவே இல்லை என்று அங்கலாய்க்க, மற்றொரு தரப்பினர் ரஜினியை இயக்குனர் வித்தியாசமாகக் காட்டியுள்ளார் என்று பாராட்டினார்.

ஆனால் இரண்டாம் பாதி பொறுமையாகவும், அழுத்தமில்லாமலும் இருப்பதாக பொதுவான ஒரு விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் முதல்நாளில் வேட்டையன் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 70 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ரஜினியின் ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூலை விடக் குறைவு. ஆனால் தொடர் விடுமுறை என்பதால் படம் நல்ல வசூலைக் குவிக்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்