ரஜினிக்கு முதன் முதலில் மன்றம் ஆரம்பித்தவருக்கு கொரோனா… வருத்தத்தில் ரஜினி!

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (16:10 IST)
நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழகத்தில் முதன் முதலில் மன்றம் ஆரம்பித்த நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளாராம்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று இந்தியாவிலேயே நம்பர் ஒன் நடிகர். கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்த்தியாக அவர் திகழ்ந்து வருகிறார். அது போலவே தமிழகத்தில் எம் ஜி ஆருக்கு அடுத்த படியாக அதிக ரசிகர் மன்றங்களைக் கொண்டிருக்கும் நடிகரும் அவர்தான்.

இந்நிலையில் 45 ஆண்டுகளுக்கு முன்னால் முதன் முதலில் ரஜினிக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்தவர் மதுரையைச் சேர்ந்த ஏ பி முத்துமணி என்பவர். இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதையறிந்த ரஜினி அந்த ரசிகருக்கு போன் செய்து உடல்நலம் விசாரித்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்