அஜித் தற்போது அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் கடந்த 21ஆம் தேதி அவர் துபாயில் நடந்த கார் ஓட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் அவர் 200 கிலோமீட்டருக்கும் மேலான வேகத்தில் கார் ஓட்டிய காட்சி அந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோவை பார்த்து அஜித் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.