நடிகை நயந்தாரா 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கோலோச்சி வருகிறார். மாஸ் ஹீரோக்களுக்கு இணையாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயருக்கு ஏற்ப அவர் நடிக்கும் படங்கள் வசூல் மழை பொழிகின்றன. அது போல இன்னமும் விஜய், சூர்யா, அஜித் மற்றும் ரஜினி ஆகியோரின் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவரின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. நாளுக்கு நாள் வயது குறைந்து கொண்டே செல்கிறதோ என நினைக்கும் வகையில் இருக்கிறது அந்த புகைப்படம். ஆனால் ஒரு சிலரோ அந்த புகைப்படத்தை பார்த்து ஏன் புகைப்படம் எடுக்கும் போது தூங்கிக் கொண்டு இருக்கிறார் என்பது போல கேலியான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.