மலேசியாவில் ‘2.0’ படத்தின் டீஸர்வெளியீடு நடக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக, நாளை மலேசியாவில் நட்சத்திரக் கலைவிழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல நடிகர் - நடிகைகள் கலந்து கொள்கின்றனர். இதற்காக ரஜினி, விஜய் இருவரும் நேற்று இரவு மலேசியா புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்த விழாவில், விஷால் நடித்துள்ள ‘இரும்புத்திரை’ படத்தின் டீஸரும், ‘சண்டக்கோழி 2’ படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட இருக்கிறது. அத்துடன், விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் டீஸரும் வெளியிடப்பட இருக்கிறது.
இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தின் டீஸரும் வெளியிடப்பட இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. ரஜினியும் இந்த விழாவில் கலந்து கொள்வதால், அங்கேயே வைத்து டீஸரை வெளியிட முடிவு செய்துள்ளனர். ஏப்ரல் மாதம் ‘2.0’ ரிலீஸாக இருக்கிறது.