டிவிட்டரில் டிரெண்டான ‘ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு’ - வைரல் மீம்ஸ்

வெள்ளி, 5 ஜனவரி 2018 (15:37 IST)
நடிகர் ரஜினிகாந்த் கூறிய ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு என்கிற வசனத்தை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

 
கடந்த 31ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் முன்னிலையில் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த போது ‘ எனக்கு அரசியலை கண்டு பயமில்லை. மீடியாவை பார்த்துதான் பயம். நேத்து திடீர்னு ஒரு பத்திரிக்கையாளர் என் முகத்திற்கு முன் மைக்கை நீட்டி உங்கள் கொள்கைகள் என்ன? என கேட்டார். எனக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு’ எனக் கூறியிருந்தார்.

 
அரசியலுக்கு வர விரும்பும் ஒருவருக்கு ஊடகங்களை கண்டு பயம் இருக்கலாமா? என்கிற விவாதம் ஒரு பக்கம் எழுந்துள்ள நிலையில், ரஜினி கூறிய ‘ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு’ என்கிற வசனத்தை ஹேஸ்டேக்காக பயன்படுத்தி சமூக வலைத்தளமான டிவிட்டரில் நெட்டிசன்கள் ஏராளமான மீம்ஸ்களை பதிவு செய்து கிண்டலடித்து வருகின்றனர்.
 
அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...









 




 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்