மூன்று மதங்களுக்கும் ஆலயம் கட்டும் ராகவா லாரன்ஸ் ...

Webdunia
திங்கள், 2 மார்ச் 2020 (16:50 IST)
மூன்று மதங்களுக்கும் ஆலயம் கட்டும் ராகவா லாரன்ஸ் ...

தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இருந்து தன் முயற்சியால் நடிகராகவும், இயக்குநராகவும் ஜொலித்துக் கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ்.  இவர் சமூக சேவகராகவும், ஏழைக் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் கல்வி மற்றும் மருத்து வசதிகள் செய்து தருபவராகவும் இருந்து வருகிறார். 
 
கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு அவர் சார்பில் வீடு கட்டிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், ஹிந்தியில் ராகவா லாரன்ஸ், அக்‌ஷய் குமாரை வைத்து ’லக்‌ஷ்மி பாம் ’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் ராகவா லாரன்ஸ் வீடுஇல்லாத திருநங்கைகளுக்கு வீடு கட்டித் தரும் முயற்சியில் ஈட்டுபட்டுள்ளதை அறிந்த நடிகர் அக்‌ஷய் குமார், ரூ.5 கோடி நிதியை கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்த தகவலை நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ராகவா லாரன்ஸ், அத்துடன், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் ஆகிய மூன்று மதங்களுக்கும், சேர்ந்து ஆலயம் ஒன்று கட்ட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
மேலும், இந்த ஆலயத்தில் அனைவரும் சமமாக உணவருந்த அன்னதான கூடம் ஒன்று அமைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்படவுள்ளதாகவும், விரையில் இதற்கான வேலைகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்