கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வருபவர் நசீம். இவரது மனைவி தன்யா. இந்த தம்பதியர் தங்கள் மகனை 1 ஆம் வகுப்பில் சேர்க்க முடிவு செய்து, அங்குள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற நசீம் தனது மகனை அந்தப் பள்ளியில் சேர்க்க விண்ணப்பம் பெற்றார்.
அந்த விண்ணப்பத்தை அவர் நிரப்பிக் கொண்டிருந்தபோது, மதம் என்று குறிப்பிடும் இடத்தில், மதம் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து கேரள கல்வி அமைச்சர், இதுகுறித்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டது. அதன்பின் நசீமின் மகனை பள்ளியில் சேர்ப்பதாக அறிவித்தது. ஆனால் நசீன் தன் மகனை வேறு பள்ளியில் சேர்ப்பதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.