’மாஸ்’ நடிகரால் ’மாஸ்’ இயக்குனர் ஆனேன்: பிரபல நடிகருக்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ்

Webdunia
ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (14:23 IST)
தெலுங்கு திரை உலகின் நடிகர் நடித்த ’மாஸ்’ திரைப்படத்தின் மூலம் நான் ’மாஸ்’ இயக்குனர் ஆனேன் என்று ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் 
 
கடந்த 2015 ஆம் ஆண்டு நாகார்ஜூன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ’மாஸ்’. இந்த படத்தின் மூலம்தான் முதன்முதலாக ராகவா லாரன்ஸ் இயக்குனரானார். அதுவரை நடன இயக்குனராக மட்டும் இருந்த அவரை ஒரு இயக்குனராகவும் திரையுலகம் அவரை திரையுலகம் ஏற்று கொண்டது இந்தப் படத்தில்தான். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து தொடர்ச்சியாக அவர் பல படங்களை இயக்கியும் நடித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தனக்கு முதன் முதலாக இயக்குனர் வாய்ப்பு கொடுத்த நடிகர் நாகார்ஜுன் அவர்களுக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். ’மாஸ்’ படத்தின் மூலம் இயக்குநராக்கிய மாஸ் நடிகர் நாகார்ஜூன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் அவர் நலமுடன் இருக்க ராகவேந்திரா சுவாமியை பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறியுள்ளார்
 
ராகவா லாரன்ஸ் வாழ்த்துக்கு பதிலளித்த நாகார்ஜுனா ’நீங்கள் இயக்கி வரும் லட்சுமிபாம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். இந்த இரு டுவிட்டூக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்