ஷங்கரே அழைத்தும் நடிக்க மறுத்த ஆர் ஜே பாலாஜி- ஏன் தெரியுமா?

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (13:08 IST)
நடிகர் ஆர் ஜே பாலாஜி வானொலியில் இருந்து வந்து இப்போது நடிகராகவும் இயக்குனராகவும் வளர்ந்து வருகிறார்.

வானொலிகளில் தமிழ் சினிமாக்களை கண்டபடி விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கியவர் ஆர் ஜே பாலாஜி. ஆனால் அதன் பின்னர் அவரே தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்த அவர் இப்போது ஹீரோவாகவும், இயக்குனராகவும் மாறியுள்ளார்.

இந்நிலையில் அவர் இந்தியன் 2 படத்தில் நடிக்க இயக்குனர் ஷங்கரால் அழைக்கப்பட்டும், அந்த வாய்ப்பை மறுத்ததாக சொல்லப்படிகிறது. மூக்குத்தி அம்மன் படத்தை அவர் இயக்கி நடித்துக் கொண்டிருந்த போது ஷங்கர் அழைத்ததாலும், ஹீரோவாக மாறிய பின்னர் இனிமேல் சிறிய வேடங்களில் நடிக்க வேண்டாம் என அவர் முடிவெடுத்ததாலும் அந்த வாய்ப்பை நிராகரித்ததாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்