சிவகார்த்திகேயனுடன் படமா? முருகதாஸ் தரப்பு பதில்!

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (13:02 IST)
இயக்குனர் முருகதாஸ் சிவகார்த்திகேயனுடன் படம் பண்ண உள்ளதாக வெளியான தகவலை மறுத்துள்ளார்.

மாஸ்டர் படத்துக்குப் பின்னர் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தை இயக்க இருந்த ஏ ஆர் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இதையடுத்து அவர் சில ஹீரோக்களிடம் கதை சொல்லி அவர்கள் நடிக்க மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதையடுத்து இயக்குனர் முருகதாஸ் வால்ட் டிஸ்னிக்காக ஒரு அனிமேஷன் திரைப்படத்தை எடுத்துத் தர முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த திரைப்படத்துக்கு முருகதாஸ் கதை மட்டுமே எழுதித் தருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் முருகதஸ் சிவகார்த்திகேயனை சந்தித்து ஒரு கதை சொன்னதாகவும் இருவரும் இணைந்து ஒரு படத்தில் இணையப் போவதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த செய்தி உண்மையில்லை என முருகதாஸ் தரப்பு மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்