மூக்குத்தி அம்மன் ஆசியால் வெற்றி பெற்ற ஜோ பிடன்! ஆர் ஜே பாலாஜி விளம்பரம்!

Webdunia
திங்கள், 9 நவம்பர் 2020 (18:21 IST)
மூக்குத்தி அம்மன் படத்துக்கு நூதனமான முறையில் விளம்பரம் செய்துள்ளார் ஆர் ஜே பாலாஜி.

நயன்தாரா நடிப்பில் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வந்த 'மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நாகர்கோவில் பகுதியில் நடைபெற்று முடிவடைந்தது.  கடந்த மே மாதமே ரிலீஸ் ஆகவேண்டிய இப்படம் கொரோனா ஊரடங்கினாள் தள்ளி சென்றது. இதனால் வருகிற தீபாவளி தினத்தை முன்னிட்டு "மூக்குத்தி அம்மன்" படம் விஜய் டிவி மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்துக்காக ஆர் ஜே பாலாஜி வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்து வருகிறார். நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் மூக்குத்தி அம்மன் அருளால்தான் வெற்றி பெற்றார்கள் என்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் படத்தின் இயக்குனரும் நடிகருமான ஆர் ஜே பாலாஜி.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்