கறுப்பர் கூட்டத்திற்காக வேல் யாத்திரையா? பிரேமலதா கேள்வி

திங்கள், 9 நவம்பர் 2020 (18:13 IST)
வேல் யாத்திரைக்கான நோக்கம் என்ன? என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். 

 
தமிழகத்தில் நவம்பர் 6 தொடங்கி டிசம்பர் 6 வரை பாஜகவின் வேல் யாத்திரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் தடையை மீறி கடந்த வெள்ளிக்கிழமை திருத்தணியில் யாத்திரை தொடங்கிய பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.  
 
இந்நிலையில் எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் வேல் யாத்திரை நடத்தியே தீருவோம் என பாஜக தமிழக தலைவர் எல்,முருகன் கூறியுள்ளார். இதனிடையே காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இதனை விமர்சித்தார். 
 
இவரை தொடர்ந்து தற்போது தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக பா.ஜ.க. சார்பில் வேல் யாத்திரை’ முன்னெடுக்கப்பட்டுள்ளது. வேல் யாத்திரைக்கான நோக்கம் என்ன? கறுப்பர் கூட்டத்திற்காக யாத்திரை நடத்தப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்