ரூ.230 கோடி வசூல் செய்த புஷ்பா

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (16:37 IST)
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா திரைப்படம் 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 17 ஆம் தேதி வெளியான புஷ்பா திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.  

இந்நிலையில், புஷ்பா திரைப்படம்  உலகம் முழுவதும் 1 வாரத்தில்  சுமார் ரூ. 229  கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த ஆண்டு வெளியான இந்திய படங்களில் அதிக வசூல் செய்த படமாக புஷ்பா  இடம் பிடித்துள்ளது.

தமிழில் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற மாஸ்டர் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்களின் வசூலையும் தாண்டியுள்ள நிலையில் அல்லு அர்ஜூன் கேரியலில் இந்தப் படம் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.

மேலும், வரும் வாரத்தில் இப்படம் மேலும் வசூல் குவிக்கலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்