டிசம்பர் 17 ஆம் தேதி வெளியான புஷ்பா திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆனாலும் வசூலில் சோடை போகவில்லை. இதுவரை 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்தி வெர்ஷன் வார இறுதி நாட்களில் மட்டும் 12 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது இதுவரை அல்லு அர்ஜுன் படங்களுக்கு இல்லாத வசூலாகும். இத்தனைக்கும் வட இந்தியாவில் பல மாநிலங்களில் இன்னமும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உலகம் முழுவதும் 3 நாட்களில் சுமார் 173 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த ஆண்டு வெளியான இந்திய படங்களில் அதிக வசூல் செய்த படமாக புஷ்பா நிச்சயம் இடம்பிடிக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் தமிழில் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற மாஸ்டர் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்களின் வசூலையும் தாண்டியுள்ளது.