இந்திய சினிமாவிலேயே முதல் முறை…. டிக்கெட் முன்பதிவில் சாதனை படைத்த புஷ்பா 2!

vinoth
செவ்வாய், 3 டிசம்பர் 2024 (08:41 IST)
புஷ்பா முதல் பாகத்தின் வெற்றி அதன் இரண்டாம் பாகத்தின் வணிக மதிப்பைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. அதனால் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். தற்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது. படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது.

படத்துக்கான ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படம் 3 மணி நேரம் 21 நிமிடம் ஓடும் வகையில் எடிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை படம் ரிலீஸாகவுள்ள நிலையில் படத்துக்கான முன்பதிவு பல இந்திய நகரங்களில் தொடங்கியுள்ளது. இந்நிலையில் டிக்கெட் முன்பதிவு தளமான புக் மை ஷோ தளத்தில் அதிவேகமாக 10 லட்சம் டிக்கெட்கள் விற்பனையான முதல் படம் என்ற சாதனையைத் தற்போது புஷ்பா 2 படைத்துள்ளது. முன்னதாக பாகுபலி 2 மற்றும் கல்கி ஆகிய படங்கள் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்