நேரடி இந்தி படத்தில் நடிக்க மாட்டேன்… அல்லு அர்ஜுன் பதில்!

vinoth

சனி, 30 நவம்பர் 2024 (14:50 IST)
புஷ்பா முதல் பாகத்தின் வெற்றி அதன் இரண்டாம் பாகத்தின் வணிக மதிப்பைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. அதனால் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். தற்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது. படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது.

இன்னும் 10 நாட்களில் படம் ரிலீஸாகவுள்ள நிலையில் படத்துக்கான ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படம் 3 மணி நேரம் 21 நிமிடம் ஓடும் வகையில் எடிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் படத்தின் ப்ரமோஷனில் கலந்துகொண்ட அல்லு அர்ஜுன் நேரடியாக பாலிவுட் படங்களில் நடிப்பது குறித்து பேசியுள்ளார். அதில் “நான் முன்பே தேவி ஸ்ரீ பிரசாத்திரம் ஏன் பாலிவுட் படங்களில் நடிப்பதில்லை எனக் கேட்பேன். அவர் அதற்கு நீங்கள் பாலிவுட் படத்தில் நடித்தேன். நான் இசையமைக்கிறேன் எனக் கூறினார். ஆனால் நான் நேரடி இந்தி படத்தில் நடிப்பதில்லை என்ற முடிவில் இருந்தேன். ஏனென்றால் அப்பொழுது பாலிவுட்டில் அறிமுகமாவது மிகவும் கடினமாக இருந்தது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்