விஜய் நடித்த மெர்சல் உள்பட பல திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளி அவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளிக்கு லேசான மாரடைப்பு தான் என்றும் அதனால் அவர் ஓரிரு நாட்களில் குணமாகி விடுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் சமீபத்தில் போட்டியிட்டு தலைவர் பதவியில் வென்ற முரளி அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்