விஜய்க்கு சம்பளம் இவ்வளவா? வாயடைக்க வைத்த தெலுங்கு தயாரிப்பாளர்!

வெள்ளி, 7 மே 2021 (15:42 IST)
விஜய் நடிக்கும்  தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. அதையடுத்து அவர் நடிக்கும் படத்தை  தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு சென்னைக்கு வந்து விஜய்யின் மேலாளரான ஜெகதீஷை அடிக்கடி சந்திப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் விஜய்யின் அடுத்த பட தயாரிப்பாளர்கள் பட்டியலில் தில் ராஜுவும் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அப்படி தில் ராஜு தயாரிக்கும் படத்தை இயக்கப்போவது ஒரு தெலுங்கு இயக்குனராக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் மகரிஷி என்ற படத்தின் மூலம் ஹிட் கொடுத்த வம்சி பைடிபல்லி இயக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் கதையை விஜய் கேட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை எந்த முடிவையும் சொல்லவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் விஜய்யைக் கவரும் விதமாக தயாரிப்பாளர் தில் ராஜு 120 கோடி ரூபாய் சம்பளம் தருவதாக மிகப்பெரிய ஆஃபரை கொடுத்துள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்