நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

J.Durai

திங்கள், 20 மே 2024 (18:19 IST)
நடிகர் சூரி கோவை ப்ரோசோன்  மாலில் கருடன் படம் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் கூறியது .....
 
காமெடியனாக பார்க்கப்பட்ட சூரி விடுதலை திரைப்படத்திற்கு பிறகு வேறு மாதிரியான ஒரு ஜானரில் இருந்திருப்பேன் அதே போல் இந்தப் படத்தில் வேறு ஒரு பரிணாமத்தில் இருந்திருப்பேன் என நம்புகிறேன். 
 
கதாநாயகனாகவே தற்பொழுது தனக்கு வாய்ப்புகள் வந்துள்ளதாகவும் காமெடியனாக வாய்ப்புகள் தற்போது வரவில்லை. 
 
மேலும் இந்த படத்தில் நடிகர் சசிகுமார் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
விடுதலைப் படத்தில் இருந்தது போலவே இந்த படத்திலும் சிறிது கஷ்டங்கள் அனுபவித்துள்ளேன்
 
அதற்கான பலன் நிச்சயமாக கிடைக்கும் என நம்புகிறேன். 
காமெடி கதாபாத்திரங்களை நடிக்கும் பொழுது அதற்கான காட்சிகளை மட்டும் நடித்துவிட்டு சென்று விடுவோம்  தற்பொழுது கதாநாயகனாக நடிக்கின்ற போது மிகப்பெரிய பொறுப்புணர்ச்சி இருப்பதாக உணர்கிறேன்.
 
கதாநாயகனாக வெற்றிமாறன் அளித்த இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு  மெனக்கெட வேண்டி உள்ளது. 
 
மேலும் தான் கடந்து வந்த பாதையை நினைத்து பெருமை கொள்வதாகவும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றிமாறன் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு மிகவும் நன்றாக இருப்பதாகவும் தனக்கு இன்னொரு விடுதலை படமாக இது அமையக்கூடும் என்று கூறி இருப்பதாகவும் நடிகர் சூரி தெரிவித்தார்.
 
துரை செந்தில் இயக்குனரிடம் படம் செய்ய வேண்டும் என்று தானே தான் ஆசைப்பட்டதாக கூறினார். விடுதலை திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தின் கதாநாயகனாக இருந்த நிலையில் அதிலிருந்து வெளியில் வரும் பொழுது தனக்கு ஒரு மாஸ் என்ட்ரி வைத்து விட்டால் ஒரு பக்கம் தான் தனது வண்டியை விட வேண்டும் என கூறினார். சினிமாவில் எப்பொழுதும் Empty என்பதே இருக்காது என குறிப்பிட்ட அவர் தொடர்ந்து அந்தந்த இடத்திற்கு ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள் 
 
மேலும் சினிமா அந்த இடத்திற்கு ஒரு ஆளை தேர்வு செய்து விடும். 
 
தான் கதாநாயகனாக நடிக்கும் பொழுது யார் காமெடியன் கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார்களோ அவர்களை கட்டாயமாக தேர்வு செய்வேன் என்றார்.
 
காமெடி நடிகர்கள் சிலர் வறுமைக்கோட்டில் இருப்பது குறித்தும் சிலர் உயிரிழந்தது குறித்தும் கேள்வி எழுப்பியதற்கு ...
 
அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளை அவர்களுக்கு செய்து வருகிறார்கள்  சில சமயங்களில் இயற்கை காரணங்களிலினால் மரணிப்பது வேதனை அளிக்கிறது. 
 
மேலும் தான் எந்த இயக்குனர் அழைத்தாலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்  புதிய இயக்குனர்கள் கூட உலக அளவில் திரும்பி பார்க்கின்ற அளவிற்கு படங்களை எடுக்கின்றனர்
 
சிறிய இயக்குனர் தான் என்னை உலக அளவில் கொண்டு சென்றுள்ளனர் என்றார்.
 
தல தளபதி கவின் மணிகண்டன் என்று எதிர் எதிர் நாயகர்கள் இருப்பதைப் போல் சூரி சந்தானம் என்று எடுத்துக் கொள்ளலாமா என்று கேள்வி எழுப்பியதற்கு ....
 
உங்களுடைய பார்வையில் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்  சூரிக்கு சூரி தான் என பதில் அளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்