பாரதிராஜா சூழ்நிலை கைதி ஆகிவிட்டார் – தயாரிப்பாளர் தாணு ஆதங்கம்!

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (20:58 IST)
புதிதாக தயாரிப்பாளர் சங்கம் ஒன்றை தொடங்கியுள்ள இயக்குனர் பாரதிராஜாவை ஒரு கும்பல் இயக்குவதாக தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் என்ற பெயரில் ஒரு அமைப்பு இருந்த் நிலையில், இதில் 1200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்தச் சங்கத்திற்கு விரையில் தேர்தல் வரவுள்ளது. இந்நிலையில், அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா என்பவர் தலைமையில் ஒரு அணியும்,  ஸ்ரீதேனாண்டால் பிலிம்ஸ் முரளி தலைமையில் ஒரு அணியும் தேர்தலில் போட்டியிடவுள்ளன.

இந்நிலையில் தற்போது உள்ள சங்கத்தில் படம் தயாரிப்பவர்கள் சுமார் 200 பேர் உள்ளதாகவும்  அவர்கள் படத்தயாரிப்பு தொழிலில் ஒருந்து விலகியுள்ள நிலையில் அவர்களுக்காகவே புதிய சங்கம் ஒன்றை உருவாகவுள்ளனர்.இதில் இயக்குநர் பாரதிராஜா தலைவராகவும் டி. சிவா செயலாளராகவும் பொறுப்பேற்கவுள்ளதாகவும் இச்சங்கத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இது தயாரிப்பாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான தாணு தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் ‘பாரதிராஜா என்னிடம் மனம் விட்டு பேசினார். அவரை சூழ்ந்துள்ள கும்பலே அவரை இப்படி செய்ய வைத்துள்ளது. அவர் தலைவராக வர விரும்பினால் அவரது பொறுப்பை போட்டியின்றி தேர்வு செய்துவிட்டு மற்ற பொறுப்புகளுக்கு மட்டும் தேர்தல் வைக்கலாம் என சொன்னோம். எல்லோரிடமும் கலந்து பேசி பண்ணுகிறேன் என்று சொல்லித்தான் அறிக்கை விடுத்தார். அடுத்த 2 நாட்களில் ஒரு கும்பல் அவரை சந்தித்து பேசி கையெழுத்து வாங்கி அறிக்கை கொடுத்துவிட்டது. அவர் சூழ்நிலைக் கைதி ஆகிவிட்டார்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்