ரவுண்ட் 2… மீண்டும் கர்ப்பமானதை அறிவித்த நடிகை ப்ரணிதா!

vinoth
வியாழன், 25 ஜூலை 2024 (16:52 IST)
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உதயன், சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இவர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அதன்பின்னர் தம்பதிகளுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. இதையடுத்து ப்ரணிதா மீண்டும் சினிமாவில் நடிக்க, அதற்காக லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதற்கிடையில் இப்போது அவர் தான் மீண்டும் கர்ப்பமாகியுள்ளதை அறிவித்துள்ளார். கர்ப்பமான வயிறோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “ரவுண்ட் 2” என அறிவித்துள்ளார். இதையடுத்து அவரின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்