தஞ்சை அழைத்த விக்ரம்.. லீவ் லெட்டர் குடுத்த கார்த்தி! – ட்விட்டர் முழுக்க ட்ரெண்டிங்தான்!

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (08:44 IST)
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் இந்த மாத இறுதியில் வெளியாக உள்ள நிலையில் அதில் நடித்த பிரபலங்கள் ட்விட்டரில் செய்து வரும் சேட்டைகள் வைரலாகி வருகிறது.

கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ALSO READ: பொன்னியின் செல்வன் கதை தெரியுமா..? கதை சுருக்கம் இதுதான்!

இந்த மாதம் 30ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ட்ரெண்டாகி வருகின்றன. படத்தை ப்ரொமோட் செய்யும் விதமாக நடிகர்களும் பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர்.

இந்த படத்தில் குந்தவையாக நடிக்கும் த்ரிஷா தனது ட்விட்டர் பெயரையும் “குந்தவை” என்று மாற்றி அமைத்திருந்தார். அதை தொடர்ந்து ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் தனது ட்விட்டர் கணக்கு பெயரை ‘ஆதித்த கரிகாலன்’ என்று மாற்றியுள்ளார்.


மேலும் ட்வீட் ஒன்றை பதிவிட்ட ஆதித்த கரிகாலன் (விக்ரம்) “சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா?குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான்.என்ன நண்பா,வருவாய் தானே?அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா!” என்று பதிவிட்டார்.

ALSO READ: ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? பொன்னியின் செல்வன் கதையும், உண்மையும்..!

அதற்கு வந்தியதேவனாக நடித்த கார்த்தி “இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் லங்கை வரை சென்ற களைப்பே இன்னும் போகவில்லை. As I am suffering from fever I want work from home. வீடியோ காலில் இளவரசியிடம் பேசி sorry சொல்லி விடுகிறேன். Pls excuse me” என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிரபலங்கள் இவ்வாறு ட்விட்டரில் செய்து வரும் சின்ன சின்ன சேட்டைகள் ரசிகர்கள் இடையே ட்ரெண்டாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்