முதல் படத்தை முடிக்கும் முன்னே இன்னொன்னா?… டிடிஎஃப் வாசனின் அடுத்த பட டைட்டில்!

vinoth

ஞாயிறு, 16 ஜூன் 2024 (07:50 IST)
யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிவேகமாக மோட்டார் பைக் ஓட்டி அதை வீடியோவாக எடுத்து போட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர். அதிலும் அவர் வீடியோக்களில் வேகமாக பைக் ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது, விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக அடிக்கடி இவர் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார்கள் குவிந்து சில முறை அவர் கைதும் செய்யப்பட்டார்.

ஆனாலும் இளைஞர்கள் மத்தியில் அவருக்கு மிகப்பெரிய அளவில் பிரபலம் கிடைத்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அவர் நடிக்கும் மஞ்சள் வீரன் என்ற படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வந்த நிலையில் வாசனின் கைது நடவடிக்கைகளால் என்ன நிலையில் இருக்கிறது என்றே தெரியவில்லை.

இந்நிலையில் மஞ்சள் வீரன் படம் முடிவதற்கு முன்பாகவே வாசன் இன்னொரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு ஐபிஎல் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்