பொன்னியின் செல்வன் விற்பனையை ஒட்டுமொத்தமாக முடித்துவிட்ட மணிரத்னம்… விற்பனையாளர்கள் புலம்பல்!

vinoth
புதன், 24 ஜனவரி 2024 (07:42 IST)
மறைந்த எழுத்தாளர் எழுதிய வெகுசன நாவலான கல்கி பல ஆண்டுகளாக தமிழ் வாசிப்பாளர்கள் மத்தியில் பரவலான கவனத்தை ஈர்த்து வந்தது. 1950 களில் வெளியான இந்த நாவல் வரிசையாக ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் புத்தக் கண்காட்சியில் டாப் செல்லராக இருந்து வந்தது.

நாட்டுடமை ஆக்கப்பட்ட இந்த நாவலை பல பதிப்பகங்களும் அச்சிட்டு விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் மணிரத்னம் இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார். படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற, இரண்டாவது பாகம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இந்நிலையில் இந்த படங்கள் வெளிவந்த பின்னர் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த புத்தகக் கண்காட்சியில் பொன்னியின் செல்வன் நாவல் விற்பனை படுவீழ்ச்சியை சந்தித்துள்ளதாம். நிறைய எண்ணிக்கையில் இந்த நாவலை அச்சிட்டு வைத்திருந்த பதிப்பகத்தார் மற்றும் விற்பனையாளர்கள் மத்தியில் இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாவலின் விற்பனை இந்தளவுக்கு சரிந்ததற்குக் காரணம் பலரும் படத்தைப் பார்த்துவிட்டதால் நாவலின் மேல் ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்