பாலசுப்ரமணியின் மனதிற்குள் உருவான இந்த தனித்துவமான கதைக்கு ஒளிப்பதிவாளர் கோகுல் பினாயின் அற்புதமான ஒளிப்பதிவு, பிலோமின் ராஜின் நேர்த்தியான படத்தொகுப்பு மற்றும் சாம் சி.எஸ்ஸின் வசீகரிக்கும் பின்னணி இசை ஆகியவை ஒன்றிணைந்து உயிரூட்டி இருக்கின்றன.
மாயா, மாநகரம், மான்ஸ்டர், டாணாக்காரன், இறுகப்பற்று என எபோதுமே வலுவான கதையை மட்டுமே நம்பி படங்களை தயாரித்து வரும் பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் பிளாக் திரைப்படமும் தங்களுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என உறுதியாக நம்புகின்றனர்.