பிரம்மாண்டமாக நடக்கும் பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா!

Webdunia
ஞாயிறு, 26 மார்ச் 2023 (14:41 IST)
பொன்னியின் செல்வன் 2ம் பாகம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதற்கான இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திட்டமாக இருந்தது பொன்னியின் செல்வன் நாவலை படமாக்குவது. லைகா தயாரிப்பில் விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி என பல பிரபல நடிகர்களை கொண்டு உருவான இரண்டு பாக பட வரிசையான பொன்னியின் செல்வனுக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்தார். பொன்னியின் செல்வன் 1 கடந்த ஆண்டு வெளியாகி பெரும் ஹிட் அடித்தது.

அதை தொடர்ந்து எதிர்வரும் ஏப்ரல் 28ம் தேதி பொன்னியின் செல்வன் 2 வெளியாக உள்ளது. முன்னதாக பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி வைரலாகியுள்ளது. பொன்னியின் செல்வன் 2 படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மார்ச் 29ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் பிரம்மாணடமான இசை விழாவில் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்