பேட்ட 100 vs விஸ்வாசம் 125 – சன்பிக்சர்ஸ் vs கே.ஜே. ஆர் .ஸ்டுடியோஸ்

Webdunia
வெள்ளி, 18 ஜனவரி 2019 (12:51 IST)
ரஜினியின் பேட்ட படமும் விஸ்வாசம் படமும் ரிலிஸூக்கு முன்னர் தியேட்டர்கள் பிடிப்பதில் காட்டிய போட்டியைப் போலவே இப்போது வசூல் நிலவரங்களிலும் காட்டி வருகின்றன.

ரஜினியின் பேட்டப் படமும் அஜித்தின் விஸ்வாசம் படமும் பொங்கல் பண்டிகை விடுமுறையைக் குறிவைத்து ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகின. இரண்டுப் படங்களுமே மாஸ் மசாலாப் படங்கள் என்பதால் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஒன்பதாவது நாளாக இன்று வரை அரங்கம் நிறைந்தக் காட்சிகளாக ஓடி வருகின்றன.

இரண்டுப் படங்களுமே வெற்றிக்கரமாக ஓடினாலும் ரஜினி ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் எங்கள் படம்தான் பெரிய ஹிட் என்ற போட்டியில் இறங்கி வசூல் விவரங்களை அறிவிக்க ஆரம்பித்தனர். இந்த போட்டி ரசிகர்களோடு நிற்காமல் தயாரிப்பு நிறுவனங்கள் வரை சென்றுள்ளன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் அதிக வரவேற்போடு தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருப்பதாகவும் , தமிழ்நாடு தவிர்த்து உலக அளவில் பேட்ட படம் விஸ்வாசத்தை முந்தி வெற்றிகரமாக ஓடுவதாகவும் ஆன்லைன் டிராக்கர்ஸ் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆன்லைன் டிராக்கர்ஸின் புள்ளிவிவரங்கள் உண்மையில்லை என சன்பிக்சர்ஸ் மறுத்துள்ளது. ஆனால் இதே சன்பிக்சர்ஸ் சர்கார் ரிலிஸின் போது இவர்களின் புள்ளி விவரங்களை மேற்கோள் காட்டி தங்கள் வியாபாரத்திற்கு விளம்பரம் தேடிக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து சன்பிக்சர்ஸ் பேட்ட படம் இன்றோடு தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் செய்ய உள்ளதாகவும், வேகமாக 100 கோடி வசூல் செய்த தமிழ்ப்படமாகப் பேட்ட மாறப்போவதாகவும் அறிவித்தது. சன் பிக்சர்ஸுக்கு எதிர்வினையாற்றும் விதமாக விஸ்வாசம் படத்தை தமிழ்நாடு முழுவதும் விநியோகித்திருக்கும் கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் விஸ்வாசம் படம் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரி 125 கோடி வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இரண்டுப் படங்களுமே வெற்றிகரமாக ஓடினாலும் ரசிகர்களைக் குஷிப்படுத்த இரு நிறுவனங்களும் இப்படி மாற்றி மாற்றி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்