தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான படங்களைத் தயாரித்து முன்னணி நிறுவனமாக இருந்து வந்தது லைகா புரொடக்ஷன்ஸ். அந்நிறுவனத்தில் ரஜினி, விஜய், கமல், அஜித், ராகவா லாரன்ஸ் என பல முன்னணி நடிகர்கள் படங்களைத் தயாரித்தனர்.
ஆனால் அந்நிறுவனம் தயாரித்த பல பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியடைந்தன. அதிலும் ரஜினி நடித்த தர்பார், வேட்டையன் மற்றும் லால் சலாம் ஆகிய படங்கள் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தின. இதனால் தற்போது லைகா நிறுவனம் பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ளது.