நாமளே ஒரு AI தான்.. நமக்கெதுக்கு இன்னொரு AI – இளையராஜா கருத்து!

vinoth

வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (07:24 IST)
உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் அறிமுகம் தேவையில்லாத நபர்களில் ஒருவர் இசையமைப்பாளர் இளையராஜா. லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரையும், அவரது பாடல்களையும் தங்கள் மூச்சுக்காற்றாகவே நினைத்து வருகின்றனர். தன்னுடைய 82 ஆவது வயதிலும் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டும் உலகம் முழுவதும் சுற்றி வந்து இசைக் கச்சேரிகள் செய்வது என்றும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

கடந்த ஆண்டு இறுதியில் தான் சிம்பொனி ஒன்றை உருவாக்கி உள்ளதாக இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ’Valiant’ எனப் பெயரிடப்பட்டுள்ள அவரின் முதல் சிம்பொனி குறித்து தகவல் வெளியானதும், உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களிடம் இருந்து ஆரவாரமாக வாழ்த்துகள் குவிந்தன. பல அரசியல் தலைவர்கள் நேரை சந்தித்து வாழ்த்தினர். மார்ச் 8 ஆம் தேதி தன்னுடைய முதல் சிம்ஃபொனியை அரங்கேற்றினார். இதையடுத்து அவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து பேசியுள்ளார். அதில் “நாம் யாரும் பிறக்கும்போதே அறிவோடு பிறப்பதில்லை. அம்மா, அப்பா, வாத்தியார் என வெளியுலகில் இருந்து செயற்கையாக (Artificial) ஆக கொடுக்கப்படுவதுதான் நம் அறிவு. அதனால் நாமளே ஒரு AI தான்.  அந்த AI இருக்கும்போது AI எதற்கு?. அந்த AI இன்னொரு AI ஐ உருவாக்குமா?” எனக் கூறியுள்ளார்.‘

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்