தமிழகத்தில் மட்டும் ரூ.125 கோடியை கடந்த 'விஸ்வாசம்' வசூல்: அதிகாரபூர்வ தகவல்

வெள்ளி, 18 ஜனவரி 2019 (06:49 IST)
தல அஜித்தின் 'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி குடும்ப ஆடியன்ஸ்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் உலக வசூல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரே ரூ.100 கோடியை கடந்தது.

இந்த நிலையில் இந்த படம் வரும் சனி அல்லது ஞாயிறுக்குள் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலை கடக்கும் என்று முன்னணி விநியோகிஸ்தர் ஒருவர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த படம் நேற்றே ரூ.125 கோடி வசூலை கடந்துவிட்டதாக இந்த படத்தின் தமிழக விநியோகிஸ்தர் கே.ஆர்.ஜே ஸ்டுடியோஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்த முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை 'விஸ்வாசம்' பெற்றுள்ளது.

இதுகுறித்து கே.ஆர்.ஜே ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது, 'அங்காளி பங்காளியோட ஆதரவில் தமிழகத்தில் மட்டும் 'விஸ்வாசம்' ரூ.125 கோடி வசூலை இன்று கடந்துவிட்டது. நன்றி மக்களே! என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

#Viswasam125CroresVettai - Angali pangali ooda aadharavula #Viswasam has crossed 125 crores gross in TAMIL NADU alone by the end of today! Thank you makkaley

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்