முதல்வர் ஸ்டாலினுக்கு பிரபல ஒளிப்பதிவாளர் பாராட்டு!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (14:45 IST)
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவி ஏற்று 30 நாட்கள் ஆகியுள்ள நிலையில் பலர் அவரை பாராட்டி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்றும் குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது டுவிட்டரில் முதல்வருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் ’பல்வேறு பதவிகளுக்கு சரியான நபர்களை தேர்வு செய்து நியமனம் செய்து வருகிறீர்கள். இது ஒரு ஆரோக்கியமான போக்காக பார்க்கப்படுகிறது. ஒருவழியாக தமிழகத்தில் புதிய காற்று வீசுகிறது முதல்வர் அவர்களுக்கு நன்றி’ என ட்வீட்டில் பதிவு செய்துள்ளார் 
 
தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து பல முக்கிய உயர் பதவிகளுக்கு திறமையான அதிகாரிகளை நியமனம் செய்வதை அடுத்து பிசி ஸ்ரீராம் இந்த பாராட்டு தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்