ஊமை விழிகள்’ இயக்குனரின் அடுத்த படம்: பிரபல தலைவரின் வாழ்க்கை வரலாறு

Webdunia
திங்கள், 1 ஜூன் 2020 (09:58 IST)
ஊமை விழிகள்’ இயக்குனரின் அடுத்த படம்
விஜயகாந்த், கார்த்திக், ஜெய்சங்கர், சந்திரசேகர், அருண்பாண்டியன், சரிதா, சசிரேகா உள்பட பலர் நடித்த திரைப்படம் ‘ஊமை விழிகள்”. திரைப்படக் கல்லூரி மாணவரான அரவிந்தராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த 1986ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்திற்கு பின் உழவன் மகன்', 'செந்தூரபூவே' ஆகிய படங்களையும் அரவிந்தராஜ் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது பசும்பொன் தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தேசிய தலைவர்' என்ற படத்தை அரவிந்தராஜ் இயக்கவுள்ளார். ஜெ.எம்.பஷீர் பசும்பொன் தேவராக நடிப்பதோடு இந்த படத்தை ஏ.எம்.சௌத்ரி அவர்க்ளுடன் இணைந்து தயாரிக்கவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பிரபல தலைவரின் வாழ்க்கை வரலாறு
தேவர் சமூகத்தை சேர்ந்த சௌத்ரி தங்கள் தேவரை போல உருவ அமைப்பில் உள்ள பஷீரிடம் தேவராக படத்தில் நடிக்க கேட்டவுடன் உடனே ஒப்புக் கொண்டதாகவும், தேவர் மீது அதிக மரியாதை கொண்ட பஷீர் வருடா வருடம் பசும்பொன் சென்று தேவரை வணங்க கூடியவர் என்றும் இந்த படத்திற்காக அவர் படப்பிடிப்பு முடியும் வரை விரதம் இருக்க போவதாகவும் கூறப்படுகிறது..
 
பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு புத்தகமான "முடிசூடா மன்னர் பசும்பொன் தேவர்" என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு படமாக்கபட உள்ள இந்த படத்தில் முக்கிய வரலாற்று தலைவர்கள் கேரக்டரில் பிரபல நடிகர்கள் நடிக்கவிருப்பதாகவும், இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்