ஓடிடியில் வெளியானது பார்த்திபனின் டீன்ஸ் திரைப்படம்!

vinoth

வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (08:05 IST)
வித்தியாச இயக்குனர் பார்த்திபன் கடந்த ஆண்டு இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவர் இயக்கியுள்ள டீன்ஸ் என்ற படம்  ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 படத்தோடு ரிலீஸ் ஆனது.

அதனால் முதல் நாளில் இந்த படத்துக்கு பெரியளவில் ரசிகர்கள் கூட்டம் இல்லை. ஆனால் இந்தியன் 2 படத்துக்கு தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைக்க ஆரம்பித்துள்ள நிலையில் மெல்ல மெல்ல இந்த படத்துக்கான காட்சிகள் பல மல்ட்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் காட்சிகள் அதிகமாக்கப்பட்டுள்ளன. இப்போது படத்துக்கு டீசண்டான கூட்டம் வர ஆரம்பித்துள்ளது.

ஆனாலும் அந்த படம் எந்த ஓடிடியிலும் இதுவரை வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் எந்த விளம்பரமும் இல்லாமல் ஸ்ட்ரீம் ஆகத் தொடங்கியுள்ளது. திரையரங்கில் கிடைக்காத வரவேற்பு ஓடிடியிலாவது இந்த படத்துக்குக் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்