மோசமான விமர்சனங்களாலும், கேலிகளாலும் படத்தில் இருந்து 12 நிமிட நேரத்தைக் குறைத்தனர். ஆனால் அப்போதும் அந்த படம் ரசிகர்களை தியேட்டருக்குள் ஈர்க்கவில்லை. இதனால் இந்தியன் 3 மீது ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு அப்படியே படுத்துவிட்டது. இந்த ஆண்டின் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபீஸ் டிசாஸ்டர் ஆனது இந்தியன் 2.
இதையடுத்து நேற்று இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆனது. ஓடிடியிலாவது ரசிகர்களைக் கவருமா என்று பார்த்தால், தியேட்டர் ரிலீஸை விட ஓடிடி ரிலீஸில் அதிக ட்ரோல்கள் எழுந்துள்ளன. வசனங்களை எல்லாம் எடுத்து வீடியோ துணுக்குகளாகப் பகிர்ந்து அதிக ட்ரோல்களை நெட்டிசன்கள் பகிர ஆரம்பித்துள்ளன.